ஆத்தூர் தொகுதியில் அரசு மகளிர் கல்லூரி அமையுமா?
ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி, தொழிற்பேட்டை அமைக்கப்படும் என பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தும் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.


ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி, தொழிற்பேட்டை அமைக்கப்படும் என பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தும் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
ஆத்தூர் தொகுதியில் பிளஸ் 2 தேர்வை மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதி வருகின்றனர். இவர்களில் வசதியுள்ளவர்கள் தனியார் கல்லூரிகளையும், வசதி இல்லாதவர்கள் கெங்கவல்லி தொகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியிலும் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
ஆகையால், ஆத்தூர் தொகுதியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், இந்தத் தொகுதியில் பெரும்பாலோர் வேளாண்மையை நம்பி உள்ளதால், வறட்சியின்போது விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் இந்தத் தொகுதியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருவ மழையால் ஏமாற்றம் அடையும் விவசாயிகள், தற்போது பணப் பயிருக்கு மாறி வருகின்றனர். அதனால், அரசு இந்தத் தொகுதியில் நதி நீர் இணைப்பு மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
ஆத்தூர் வசிஷ்ட நதியை சீரமைக்க வேண்டும்
ஆத்தூரில் ஓடும் வசிஷ்ட நதி எப்போதும் வற்றாத நதியாக இருந்ததால்தான் வசிஷ்ட நதி எனவும், வசிஷ்ட மாமுனிவர் நிறுவியது எனவும் கூறி வருகின்றனர். ஆனால், தற்போது இந்த நதி, சாக்கடையாக மாறிவிட்டது. அனைத்து சேகோ ஆலைகளின் கழிவு நீர், சாக்கடை நீர் போன்றவை நதியில் கலந்து விடுகின்றன. இதனை பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.
கல்லாறு அணைத் திட்டம் நிறைவேற்றப்படுமா?
ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தில் உள்ள பொதுக் கிணற்றில்தான் முன்பு பொதுமக்கள் குடிநீர் எடுத்து வந்தனர். மேட்டூர் - ஆத்தூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டதால், ராமநாயக்கன்பாளையத்தில் இருந்து குடிநீர் எடுப்பதை பொதுமக்கள் நிறுத்தி விட்டனர்.
மேலும், விவசாயத்துக்கு பயனளிக்கும் வகையில் கல்லாறு அணைத் திட்டம் தீட்டப்பட்டது. இந்தத் திட்டம் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர். ஆனால், இதுநாள் வரை திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது.
ஆத்தூர் வசிஷ்ட நதிக் கரையில் ஸ்ரீகாயநிர்மலேஸ்வரர் கோயில், ஏத்தாப்பூரில் சாம்பசிவமூர்த்தி கோயில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயம், கூகையூர், ஆறகளூர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் திருப்பணிகள் நடத்தி, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...