நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஓமலூரில் 121 பேர் மனு தாக்கல்

ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட உள்ளாட்சிப் பதவிகளில் போட்டியிட வியாழக்கிழமை 121 பேர் மனு தாக்கல் செய்தனர்.

News image
Updated On :30 செப்டம்பர் 2016, 3:10 am

பூதலூர் முத்து

ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட உள்ளாட்சிப் பதவிகளில் போட்டியிட வியாழக்கிழமை 121 பேர் மனு தாக்கல் செய்தனர்.
 ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என 387 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
 இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்காக 102 பேரும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்காக 16 பேரும், ஒன்றியக்குழு, பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவருமாக 121 பேர் மனு தாக்கல் செய்தனர்.
 ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு பதவிகளுக்கு இதுவரை 292 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.