வாழப்பாடியில் ரூ.40 லட்சத்தில் இணைப்புச் சாலை அமைப்பு
வாழப்பாடியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ரூ.40 லட்சத்துக்கு இணைப்புச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


வாழப்பாடியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ரூ.40 லட்சத்துக்கு இணைப்புச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி பேரூராட்சி அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தை, நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தோடு இணைக்கும் வாழப்பாடி - தம்மம்பட்டி சாலையில், புதுப்பாளையம் அருகே சேலம் - சென்னை தேசிய புறவழிச்சாலை குறுக்கிடுகிறது.
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை, தம்மம்பட்டி சாலையோடு இணைப்பதற்கு சாலை அமைக்கப்படாததால், தம்மம்பட்டி மற்றும் மங்களபுரம் சாலையில் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் வாழப்பாடி நகருக்குள் சென்று வந்தன. அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, வாழப்பாடி பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல வழியின்றி தவித்து வந்தனர். எனவே, வாழப்பாடி பகுதி மக்களின் நலன்கருதியும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், புறவழிச்சாலையின் வடபுறம், சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் ரூ. 10 லட்சம் பங்களிப்புடன், 2015 - 16 தன்னிறைவு திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சம் செலவில் இணைப்புச்சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து புறவழிச்சாலையின் தென்புறமும் இணைப்புச்சாலை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். தேசிய நெடுஞ்சாலைத் துறையும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியதால், சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் ரூ. 13.50 லட்சம் நிதியுதவியுடன், 2016 - 17 தன்னிறைவு திட்டத்தின் கீழ், ரூ.40 லட்சம் செலவில், 215 மீட்டர் தூரத்திற்கு இணைப்புச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதனால், வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களும், வாகன ஓட்டுநர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...