விவசாயிகளுக்கு அசோலா வளர்ப்பு செயல்முறை விளக்கம்

மகுடஞ்சாவடி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் கன்னந்தேரி கிராமத்தில் விவசாயிகளுக்கு அசோலா வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கம்  புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

மகுடஞ்சாவடி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் கன்னந்தேரி கிராமத்தில் விவசாயிகளுக்கு அசோலா வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கம்  புதன்கிழமை நடைபெற்றது.
மகுடஞ்சாவடி வேளாண் உதவி இயக்குநர் ஆர்.செல்லத்துரை தலைமை வகித்து,  கன்னந்தேரி கிராமத்தில்  விவசாயிகளிடத்தில் அசோலா குறைந்த செலவில் கால்நடைகளுக்கு தீவனமாகவும், நெல் சாகுபடியில் உயிர் உரமாகவும் செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்தப் பயன்படுகிறது என்றார். 
உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் வி.குணசேகரன் முன்னிலை வகித்து, அசோலாவை கால்நடை மற்றும் கோழிகளுக்கு பயன்படுத்துவதனால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கி கூறினார். அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார் அசோலாவை வளர்ப்பது அதற்கு வேளாண் துறையின் சார்பில் வழங்கப்படும் மானியங்கள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தார். இதில் அட்மா திட்ட உதவித் தொழில்நுட்ப மேலாளர் கார்த்திகேயன்,  மகேந்திரன் மற்றும் விவசாயிகள்  கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com