ராம்கோ சிமென்ட் தொழிற்சாலையில் குழந்தைகள் தின விழா
வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் தொழிற்சாலையில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.


வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் தொழிற்சாலையில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு துணைப் பொது மேலாளர் சுப்பாராவ் தலைமை வகித்தார். பணியாளர் துறை அலுவலர் மணிவேல் வரவேற்றார்.
இதில், வாழப்பாடி, சிங்கிபுரம், பேளூர், துக்கியாம்பாளையம், கீரிப்பட்டி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியரிடையே, பேச்சு, கட்டுரை, ஓவியம், விநாடி -வினா, நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநர் முரளிதரன், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அசோக்குமார், ராம்கோ கணக்குத் துறை அலுவலர் சுரேஷ்குமார், சன் ஸ்டார் அறக்கட்டளை தலைவர் ஜவஹர், அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் கு.பாரதி, ராஜேந்திரன், ரஜினி, தேவராஜன், இலக்கியப் பேரவை செயலர் எம்கோ ஆகியோர் மாணவ - மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ராம்கோ நிறுவனப் பணியாளர்கள் முனியசாமி, கார்த்திகேயன், அரியநாயகம், சுப்புராஜ், சுபாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...