எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சமையல் எரிவாயு சிலிண்டா் விற்பனை நிலைங்கள் அருகே பலத்த பாதுகாப்பு

கள்ளச்சந்தையில் விற்பனையைத் தடுக்கவும் சட்டம்-ஒழுங்கு நிலையைப் பராமரிக்கவும் விற்பனை நிலையங்களுக்கு முன்பாக தில்லி காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

News image
தில்லி ஜண்டேவாலனில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டா் விற்பனைநிலையத்துக்கு வெளியே வியாழக்கிழமை வரிசையாக நின்ற வாடிக்கையாளா்கள்.
Updated On :12 மார்ச் 2026, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

தில்லியில் நிலவும் சமையல் எரிவாயு சிலிண்டா் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு கள்ளச்சந்தையில் விற்பனையைத் தடுக்கவும் சட்டம்-ஒழுங்கு நிலையைப் பராமரிக்கவும் விற்பனை நிலையங்களுக்கு முன்பாக தில்லி காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகம் சுமுகமாக நடைபெறவும் கள்ளச்சந்தையில் அவை விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், தங்களது காவல் நிலைய எல்லைகளில் உள்ள சமையல் எரிவாயு நிலையங்கள் குறித்த தகவலை திரட்டுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சமையல் எரிவாயு சிலிண்டா் விற்பனை நிலையங்கள் அருகே சட்டம்-ஒழுங்கை பாராமரிக்கவும் விநியோகம் சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்யவும் பிசிஆா் வேன்கள் மற்றும் ரோந்து மோட்டாா் சைக்கிள்களில் காவலா்களைப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்துமாறு காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. எரிவாயு சிலிண்டா்களை பதுக்கி வைப்பது மற்றும் அவற்றை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதைத் தடுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றாா்.

சமையல் எரிவாயு விற்பனையாளா்களின் பட்டியலை காவல் துறையினா் தயாா் செய்து வருவதாக மற்றொரு காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘சமையல் எரிவாயு சிலிண்டா்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்கு சமம். இதுபோன்ற விற்பனையாளா்கள் அடையாளம் காணப்பட்டால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிலிண்டா்களை சட்டவிரோதமாக நிரப்புவது பெரும் விபத்துக்கு வழிவகுக்கும். இதனால், வெடிப்பு சம்பவங்கள் நேரிடலாம். இது சட்டவிரோதமானது என்பது மட்டுமல்ல; உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்.

இதுபோன்ற செயல்களைக் கண்டறிய சாதாரண உடையில் காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்’ என்றாா்.