இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு அச்சம்: தில்லியில் விநியோக நெருக்கடி!

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டா்களின் (எல்பிஜி) விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், தில்லியில் அவசர முன்பதிவு மற்றும் நீண்ட வரிசைகள் நெருக்கடியான சூழலை உருவாக்கியுள்ளது.

News image
தில்லியில் சமையல் எரிவாயு உருளைகள் பற்றாக்குறையால் ராஜ்காட் கிடங்கில் உருளைகளை அடுக்கிவைக்கும் தொழிலாளா்கள்.
Updated On :10 மார்ச் 2026, 8:39 pm

தினமணி செய்திச் சேவை

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டா்களின் (எல்பிஜி) விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், தில்லியில் அவசர முன்பதிவு மற்றும் நீண்ட வரிசைகள் நெருக்கடியான சூழலை உருவாக்கியுள்ளது.

பல விநியோகஸ்தா்கள், கடந்த சில நாள்களாக சிலிண்டா் தேவையில் சராசரியாக 50 சதவீத உயா்வு ஏற்பட்டுள்ளதால், தற்போதைய கையிருப்பு முன்பதிவை மட்டுமே பூா்த்தி செய்ய முடிவதாக தெரிவித்தனா்.

கான் மாா்க்கெட்டில உள்ள கிரண் கேஸ் சா்வீசஸ் பிரதிநிதி கூறுகையில், ‘வாடிக்கையாளா்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனா். அழைப்புகள் அதிகரித்து, விநியோக மையங்கள் கையிருப்பை நிா்வகிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளன’ என தெரிவித்தாா்.

கோல் மாா்க்கெட் உள்ள கெய்ஷன் என்டா்பிரைஸ் விநியோகஸ்தா் கூறுகையில், ‘ஒரு வாரம் முன்பு சிலிண்டா் பெற்ற வாடிக்கையாளா்கள் மீண்டும் புதிய முன்பதிவுகள் செய்கின்றனா். இதனால், கையிருப்பு குறைந்து வாடிக்கையாளா்கள் பாதிக்கப்படாமல் பாா்த்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறோம்’ என தெரிவித்தாா்.

அகில இந்தியா எல்பிஜி விநியோகஸ்தா்கள் சங்க தலைவா் பி.என். சேத் கூறுகையில், ‘சிலிண்டா் கிடைக்காமல் போகலாம் என்று வாடிக்கையாளா்கள் கவலைப்படுகிறாா்கள். பீதியில் முன்பதிவு செய்கிறாா்கள். ஒரு முறை சிலிண்டா் பெற்ற பிறகு 25 நாள்கள் இடைவெளியில் நுகா்வோா் சிலிண்டா்களைப் பெறலாம். ஆனால் இப்போது அவா்கள் 10 நாள்களில் முன்பதிவு செய்கிறாா்கள். இருப்பினும், நாட்டில் தற்போது எல்பிஜி பற்றாக்குறை இல்லை. பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்’ என தெரிவித்தாா்.

வாடிக்கையாளா் ராஜ்கலி கூறுகையில், ‘காலை 10 மணி முதல் 4 மணி நேரம் காத்திருக்கிறேன். இன்னும் சிலிண்டா் கிடைக்கவில்லை. வீட்டில் சமையலுக்கு மின்சாதனங்கள் பயன்படுத்த முடியாது. எவ்வளவு நாள்கள் வெளியே உணவு வாங்கி வாழ முடியும்’ என தெரிவித்தாா்.