மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

அரசுப்பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய கிராம மக்கள்

வாழப்பாடி  அண்ணாநகர் காலனி,  ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்குத் தேவையான பொருள்களை, கல்விச்சீராக கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழங்கினர். 

Updated On :5 ஏப்ரல் 2018, 7:10 am IST

வாழப்பாடி  அண்ணாநகர் காலனி,  ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்குத் தேவையான பொருள்களை, கல்விச்சீராக கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழங்கினர். 
வாழப்பாடி பேரூராட்சி, அண்ணாநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 120 மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். 
இப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு  ஊர்வலமாக வந்த கிராம மக்கள், பள்ளிக்குத் தேவையான தளவாட சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை சொந்த செலவில் வாங்கி பள்ளி நிர்வாகத்திடம் கல்விச் சீர்வரிசையாக வழங்கினர். 
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவுக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஐ.சுரேஷ் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை க.ஷபீராபானு வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோகிலா, பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் செல்வம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி தெய்வானை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை ஜெ.புஷ்பா ஆண்டறிக்கை வாசித்தார்.
பள்ளி மாணவ-மாணவியரின் பாட திறனாய்வு மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.  பல்வேறு கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு, தமிழக ஆசிரியர் கூட்டணி முன்னாள் பொதுச் செயலர் கோ.முருகேசன், இலக்கியப் பேரவை செயலாளர் சிவ.எம்கோ,  ஜவஹர்,  பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் எஸ்.பி.பார்த்திபன், ப.முருகன் ஆகியோர் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர். 
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் புஷ்பா, வாசுகி, சிவமகேஸ்வரி மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.