ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

தனிநபர் கழிப்பிடம் கட்டியதில் மோசடி: ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் 

ஓமலூர் அருகே தனிநபர் கழிப்பிடம் கட்டியதில் செய்யப்பட்ட மோசடிகளை விசாரிக்கக் கோரி, பெரியேரிப்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். 

Updated On :18 ஏப்ரல் 2018, 9:45 am IST

ஓமலூர் அருகே தனிநபர் கழிப்பிடம் கட்டியதில் செய்யப்பட்ட மோசடிகளை விசாரிக்கக் கோரி, பெரியேரிப்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
 சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரியேரிப்பட்டி கிராமத்தில் தனிநபர் கழிப்பிடம் கட்டியதில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடந்துள்ளதாக கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை ஓமலூர் வந்த மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தனிநபர் கழிப்பிடம் கட்டாமலே கட்டியதாக மோசடிகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டினர். மேலும், சேலம் மாவட்டத்தை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக மாற்ற ஆட்சியர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
 இந்த நிலையில், ஓமலூர் வட்டாரம், பெரியேரிப்பட்டி கிராமத்தில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட வீடுகளில் இன்னும் தனிநபர் கழிப்பிடம் கட்டப்படமலேயே உள்ளன. இதனால், பெண்கள் குழந்தைகள் பலரும் திறந்தவெளியையே இன்றுவரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கழிப்பிடம் கட்டிவிட்டதாக கணக்குகள் காட்டப்பட்டுள்ளன.
 எனவே, மோசடியில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டப்படாமல் உள்ள வீடுகளுக்கு தனிநபர் கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
 பொதுமக்களிடம் புகார் மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், இந்த புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.