ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா 

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி, சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள அவரது நினைவுச் சின்னத்துக்கு அரசு சார்பில் செவ்வாய்க்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 9:43 am IST

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி, சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள அவரது நினைவுச் சின்னத்துக்கு அரசு சார்பில் செவ்வாய்க்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
 தமிழக அரசு சார்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு சங்ககிரி அருகே உள்ள ஈரோடு பிரிவு சாலையில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
 இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவரது பிறந்த நாளையொட்டி நினைவுச்சின்னம் அமைக்கப்பட்ட இடத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் படத்துக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சங்ககிரி எஸ்.ராஜா, வீரபாண்டி பி.மனோன்மணி, மேட்டூர் எஸ்.செம்மலை ஆகியோர் மரியாதை
 செலுத்தினர்.
 சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் டி.ராமதுரைமுருகன், வட்டாட்சியர் கே.அருள்குமார், அதிமுக ஒன்றியச் செயலர் என்எம்எஸ்.மணி, நகரச் செயலர் ஆர்.செல்லப்பன், முன்னாள் தொகுதி கழகச் செயலர் வி.ஆர்.ராஜா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.