சேலம் அருகே காதலிக்க மறுத்த பிளஸ் 2 மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி வீரபாண்டியைச் சேர்ந்தவர் லோகநாதன் (25), கூலித் தொழிலாளி. இவர், வீரபாண்டியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி பூரணியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, காதலுக்கு பூரணி மறுத்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு லோகநாதன் வீரபாண்டி அரசுப் பள்ளி அருகே காத்திருந்தாராம்.
அப்போது, பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பூரணியை, லோகநாதன் மறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினாராம். அதற்கு பூரணி மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த லோகநாதன் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதையடுத்து, லோகநாதனை ஆட்டையாம்பட்டி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியில் வந்தார்.
இந்த வழக்கை சேலம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் செவ்வாய்க்கிழமை விசாரித்து லோகநாதனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோதிடத்துக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது: தவெகவுக்கு விசிக ஆதரவு!

தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15% ஆக உயர்வு!

நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் விஜய்!
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
