சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வாழப்பாடியில்  மலர் மருத்துவமனை திறப்பு

வாழப்பாடியில் அதிநவீன வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்ட மலர் மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:16 am

DIN

வாழப்பாடியில் அதிநவீன வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்ட மலர் மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. 
வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடியைச் சேர்ந்த மருத்துவர் ஆனந்த், அவரது மனைவி மகப்பேறு மருத்துவர் இந்துமதி ஆகியோர், வாழப்பாடி பருத்தி மண்டி அருகே,  அதிநவீன  மருத்துவப் பரிசோதனைக்கூடம்,  குளிரூட்டப்பட்ட நவீன அறுவை சிகிச்சை அரங்கம், ஸ்கேன்,  எக்ஸ்ரே வசதி,  60 படுக்கை வசதிகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவுகளுடன், பொது மருத்துவம், குழந்தைகள், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ சிறப்புப் பிரிவுகளுடன் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவமனையை அமைத்துள்ளனர்.
இந்த புதிய மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.  விழாவில்,  மருத்துவர்கள் ஆனந்த், இந்துமதி வரவேற்றனர்.  மருத்துவமனை நிர்வாக இயக்குநர்கள் மருத்துவர் ஆனந்தின் பெற்றோர் பழனிசாமி,  மலர்விழி மற்றும் மருத்துவர் இந்துமதியின் பெற்றோர்,  திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரலிங்கம்,  புவனேஸ்வரி ஆகியோர்  குத்துவிளக்கேற்றி  மருத்துவமனை பிரதான கட்டடங்களைத் திறந்து வைத்தனர்.
   பயிற்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் சிவா,  சோமம்பட்டி மகேஸ்வரன்,  ஊரக  வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலர் முருகன்,   சோமம்பட்டி தொழிலதிபர் கண்ணன் மற்றும் மருத்துவர்கள், தொழிலதிபர்கள், உள்ளூர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.