தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

வாழப்பாடியில் இன்று செல்வமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

வாழப்பாடியில் செல்வமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா  வியாழக்கிழமை (ஆக.9) நடைபெறுகிறது.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

வாழப்பாடியில் செல்வமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா  வியாழக்கிழமை (ஆக.9) நடைபெறுகிறது.
வாழப்பாடியில் பிரசித்தி பெற்ற செல்வமுத்து மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா, 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே செவ்வாய்க்கிழமை மாலை,  முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்ததால், புதன்கிழமை நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து அனைத்து நிகழ்வுகளும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், 7 மணிக்கு மேல் கரகம் எடுத்தல், அலகுக் குத்தல் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடைபெறுகிறது.
காலை 7.30 மணிக்கு சுவாமி திருத்தேர் ரதமேறுதல் நிகழ்ச்சியும், பட்டக்காரர் மற்றும் செல்லியம்மன் தேர் கட்டளைதாரர்கள் முறை அழைத்தலும்,  8 மணிக்கு மேல் ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துதலும் நடைபெறுகிறது. பகல் 11 மணிக்கு செல்லியம்மன் தேரோட்டம்,  12.30 மணிக்கு மாரியம்மன் திருத்தேர் நிலைபெயர்த்தலும், பகல் 1 மணிக்கு கோயிலில் இருந்து அக்ரஹாரம் ராஜவீதியில் தேரோட்டம் புறப்பட்டு மாலை 6 மணிக்கு வைத்திப் படையாச்சி தெருவில் நிலை நிறுத்தலும் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரையிலான நிகழ்ச்சிகளில் எவ்வித மாற்றமும் இல்லையென, ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.