தம்மம்பட்டியில் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்ற உண்ணாவிரதம் செவ்வாய்க்கிழமை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
தம்மம்பட்டி பேரூராட்சியின் புதிய அலுவலகக் கட்டட சுவற்றுக்கு கட்டப்பட்ட 2 மாதத்திலேயே ரூ. 7.75 லட்சத்தில் வர்ணம் பூச விடப்பட்ட டெண்டரை ரத்து செய்யக் கோரியும், தம்மம்பட்டி பேருந்து நிலைய சுங்க வசூலை 3 வருடமாக முறைகேடாக நடத்தியதைக் கண்டித்தும், பேரூராட்சியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு சேமநல நிதி வழங்காமல் இருப்பதைக் கண்டித்தும் அனைத்துக் கட்சியினர் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காலை 11 மணிக்குத் தொடங்கிய உண்ணாவிரதத்துக்கு தம்மம்பட்டி நகர திமுக பொறுப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்ட துணைத் தலைவர் திருச்செல்வம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு பங்கேற்பாளராக சேலம் மாநகராட்சி முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷிணி பங்கேற்றார். மாலை வரை நடைபெற்ற உண்ணாவிரதத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, திக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், த.மா.கா. பிரமுகர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை உயர்வு! இன்றைய நிலவரம் (ஆக. 11)

முந்திரியில் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்புத் தொழிற்சாலை! செந்துறை விவசாயிகள் எதிா்பாா்ப்பு!

சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!

பெரம்பலூா் மாவட்டத்தில் தூா்ந்து வரும் ஏரிகள்! சீமைக்கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


