தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி

கடந்த 8 மாதங்களில் 3 திரைப்படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளதாக ஆர்.கே. செல்வமணி பேசியுள்ளது குறித்து....

Only 3 films turned a profit in 8 months R.K. Selvamani

ஆர்.கே. செல்வமணி - கோப்புப் படம்

Published On :

கடந்த 8 மாதங்களில் 3 திரைப்படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளதாக திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே. செல்வமணி இன்று (ஆக. 25) தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுடன் செல்வமணி பேசியதாவது:

''கடந்த 8 மாதங்களில் 3 திரைப்படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளது. மற்றவை எல்லாமே தோல்விப் படங்கள்தான்.

நல்ல படங்களின் பட்டியலை நான் தருகிறேன். அதில் எத்தனை ரசிகர்கள், பார்வையாளர்கள் பார்த்தார்கள் என்று சொல்லுங்கள். காமெடியாக பொழுதுபோக்காக இருக்கும் படங்கள்தான் ரசிகர்களுக்குத் தேவைப்படுகிறது.

அவர்களுக்கு கருத்துகள் கூறும் படங்களை எடுத்தால் அது எப்படி வசூல் செய்யும். சிறந்த திரைப்படங்கள் 100 எங்களிடம் உள்ளது. அதற்கு திரையரங்கே இல்லை. நல்ல படங்களை பார்க்க வந்தால்தான், நல்ல படங்கள் வரும். இது மாறி மாறி வைக்கும் குற்றச்சாட்டு.

நாங்கள் நல்ல படங்களை எடுக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் வியாபாரம் செய்யும் படங்களை எடுக்குமாறு முதலீட்டாளர் அல்லது தயாரிப்பாளர் கூறுவார். முடிவில் அதுவும் இல்லாமல் இதுவும் இல்லாமல் தரமற்ற படமே வரும்.

தின்பண்டங்களுக்கு திரையரங்கில் முன்பு அனுமதி இல்லை. இப்போது மினி நட்சத்திர விடுதியாக திரையரங்குகள் மாறிவிட்டன. முன்பெல்லாம் அடுத்து வெளியாகும் படங்களின் போஸ்டர்கள் இருக்கும். டிரெய்லர்கள் ஒளிபரப்பப்படும். ஆனால் அதனை எத்தனை திரையரங்குகள் செய்கின்றன?

உங்கள் திரையில் வெளியாகும் படத்தைக் கூட நீங்கள் மக்களுக்கு போட்டுக்காட்டவில்லை என்றால், அடுத்து என்ன படம் வருகிறது என்று மக்களுக்கு எப்படி தெரியும்.

முன்பு 50 ரூபாய் இருந்தால் படம் பார்க்கலாம். ஆனால் இப்போது திரையரங்கிற்குச் செல்ல வேண்டும் என்றால் ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும். அதற்கு யாரும் தயாராக இல்லை'' எனக் குறிப்பிட்டார்.

Summary

Only 3 films turned a profit in 8 months R.K. Selvamani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.