
சேலத்தில் மணல் லாரி சங்க நிர்வாகிகளிடம் பணம் கேட்டு மிரட்டியதாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் மண்ணின் மைந்தர்கள் கழகம் என்ற அமைப்பை ஷார்ப் முரளி மற்றும் நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மண்ணின் மைந்தர்கள் கழகத்தைச் சேர்ந்த சிலர் திங்கள்கிழமை சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள சேலம் மாநகர மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்குச் சென்றதாகத்
தெரிகிறது.
அப்போது அங்குள்ள நிர்வாகிகளிடம் மாதந்தோறும் மாமூல் தர வேண்டும் என மிரட்டியதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக, சேலம் மாநகர காவல் ஆணையாளர் சங்கரை சந்தித்து புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் குமார் விசாரித்து வந்தார்.
இதையடுத்து மண்ணின் மைந்தர்கள் கழகத்தின் சேலம் மாநகரச் செயலாளர் ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் கார்த்திக், சங்கர், ராமலிங்கம், குணா, கதிரவன் ஆகிய 6 பேரை போலீஸார் கைது
செய்தனர்.
கைதான 6 பேரும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மிரட்டல் தொடர்பாக மண்ணின் மைந்தர்கள் கழகத்தின் நிறுவனர் ஷார்ப் முரளி மற்றும் உள்ளிட்ட மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




