வரும் 8-இல் சங்ககிரி ஆஞ்சநேயர் கோயிலில் அஷ்ட மகாலட்சுமி யாகம்

சங்ககிரி சந்தைபேட்டையில் உள்ள ஸ்ரீ நவ ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ அஷ்ட மகாலட்சுமி யாகம் வரும் 8, 9 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
Updated on
1 min read

சங்ககிரி சந்தைபேட்டையில் உள்ள ஸ்ரீ நவ ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ அஷ்ட மகாலட்சுமி யாகம் வரும் 8, 9 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
ஸ்ரீ நவ ஆஞ்சநேயர் கோயிலில்  ஸ்ரீ அஷ்ட மகாலட்சுமி யாக பூஜையையொட்டி  8-ம் தேதி காலை 7.45 மணிக்கு லட்சுமி ஸஹஸ்ர நாமத்துடன் முதற் கால யாக பூஜையும்,  மாலை 5 மணிக்கு 2-ம் கால  யாக பூஜை,  9-ம்  காலை 5.30 மணிக்கு 3-ம் கால யாக பூஜை நடைபெறுகின்றன. 9ஆம் தேதி காலை 8 மணி முதல் சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, கஜ (யானை) பூஜை, அஸ்வ (குதிரை) பூஜைகளும்,  9 மணி முதல் 108 பசு மாடுகளைக் கொண்டு கோ பூஜைகளும், மாலை 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை ஸ்ரீ நவ ஆஞ்சநேயா டிரஸ்ட் குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com