இருசக்கர வாகனங்கள் திருடியவர் கைது

ஆத்தூரில் இருசக்கர வாகனங்களை திருடியதாக ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
Updated on
1 min read

ஆத்தூரில் இருசக்கர வாகனங்களை திருடியதாக ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஆத்தூரில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போயின. இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பொன்கார்த்திக்குமார் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் என்.கேசவன் தலைமையில் தனிப்படை அமைத்து இருசக்கர வாகனங்களை திருடும் மர்ம நபர்களை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை மாலை திருச்சி சாலையில் தீவிர ரோந்துப் பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். இதில் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள செங்குறிச்சி ஊராட்சியைச் சேர்ந்த மூர்த்தி மகன் பாலமுருகன் (27) என்பதும், அவர் இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 9 இருசக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com