நீரேற்று நிலையத்தில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

நங்கவள்ளி நீரேற்று நிலையத்தில் தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
Updated on
1 min read

நங்கவள்ளி நீரேற்று நிலையத்தில் தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
நங்கவள்ளி அருகேயுள்ள வீரக்கல்லை சேர்ந்தவர் பாலு (51). கட்டடத் தொழிலாளி. இவர் சனிக்கிழமை நங்கவள்ளி நீரேற்று நிலையத் தொட்டியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தொட்டியில் தவறி விழுந்ததில் அவருக்கு தலையின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்ட சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த பாலுவுக்கு முத்துலட்சுமி (46) என்ற மனைவி உள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக நங்கவள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com