குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
காடையாம்பட்டி அருகே குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


காடையாம்பட்டி அருகே குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காடையாம்பட்டி ஒன்றியம், பொம்மியம்பட்டி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்க வில்லையாம். இதனால், இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும், இந்தக் கிராமம் வறட்சியான பகுதி என்பதால் நிலத்தடிநீர்மட்டமும் குறைந்துள்ளது. இதனால், குடிநீர் இல்லாமல் கிராம பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து தங்கள் பகுதிக்கு முறையான குடிநீர் வழங்க வேண்டும் என கூறி காடையாம்பட்டியில் இருந்து கொங்கரப்பட்டி செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து தீவட்டிப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது ஒருசிலர் குடிநீர் குழாயில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பதால் கிராமத்தில் முறையாக குடிநீர் கிடைப்பதில்லை. அதனால் தங்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.இதை தொடர்ந்து காடையாம்பட்டி ஆணையர் சொக்கலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் எழிலரசி உள்ளிட்டோர் முறைகேடாக குடிநீர் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், மின் மோட்டார்களும் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும், கிராம மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...