வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது

தாரமங்கலம்அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :9 ஜூலை 2018, 3:48 am

தாரமங்கலம்அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
தாரமங்கலம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் 17 வயது மகள் சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்,கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமி, சேலத்தில் தனது செல்லிடப்பேசிக்கு ரீசார்ஜ் செய்துள்ளார்.அப்போது காகாபாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (25) என்ற இளைஞர் சிறுமியின் செல்லிடப்பேசி எண்ணை தெரிந்து கொண்டு அடிக்கடி செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுமி, தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் தாரமங்கலம் காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, உதவி ஆய்வாளர் ராஜூ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்,  இளைஞர் கார்த்திக் வழக்கம்போல சிறுமியின் செல்லிடப்பேசிக்கு தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக பேசியுள்ளார். இதையடுத்து,  இளைஞரை கார்த்திக்கை போனில் பேசி தாரமங்கலத்துக்கு வரவழைத்து  போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.மேலும், சிறுமியிடம் தகாத வார்த்தையில் பேசியது,  தொல்லை அளித்தது,  பாலியல்  துன்புறுத்துதல் போன்ற ஐந்து பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.இதையடுத்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சேலம் சிறையில் அடைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.