கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்

ஆட்டையாம்பட்டி அருகே உள்ள நைனாம்பட்டி கிராமத்தில் வீரபாண்டி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மைத் திட்டத்தின் கீழ் (அட்மா) மண்வள

Updated On :23 ஜூலை 2018, 9:33 am IST

ஆட்டையாம்பட்டி அருகே உள்ள நைனாம்பட்டி கிராமத்தில் வீரபாண்டி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மைத் திட்டத்தின் கீழ் (அட்மா) மண்வள மேம்பாடு மற்றும் பண்ணைக் கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்ப பயிற்சி  விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.
இம்முகாமில் பண்ணைக் கழிவுகளைப் பயன்படுத்தி பயிர்களில் உரத் தேவைகளைக் குறைத்தல், அங்கக முறை விவசாயம் மூலம் மண்வள மேலாண்மை முறைகள்,  மண் மாதிரி எடுத்தல்,  சரியான உர பரிந்துரை,  ஊட்டச்சத்து சார்ந்த மானிய விவரங்கள் மற்றும் மானாவாரி மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் இம்முகாமில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இந்தப் பயிற்சி முகாமில் வீரபாண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு)  பா.கார்த்திகாயினி,  துணை வேளாண்மை அலுவலர் தே.சீனிவாசன்,  வட்டார தொழில்நுட்ப மேலாளர் கே.ராஜேந்திரன்,  உதவி வேளாண் அலுவலவர்கள் மா.பிரகாஷ், ஆ.சிவசங்கர், உதவித் தொழில்நுட்ப மேலாளர்கள் சி.சரஸ்வதி, சி.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர் இப்பயிற்சியின் போது விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்
அளிக்கப்பட்டது. 
இதில் நான்கு அடி ஆழமுள்ள உள்ள குழியில் பயிர் கழிவுகளையிட்டு பாஸ்பேட் மற்றும் யூரியா உரங்கள் கலந்து அதனுடன் சாணக் கரைசலைத் தெளித்து மக்குவதற்கான செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.