எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

108 ஆம்புலன்ஸ் சேவை கூட்டம்

ஏற்காடு ஒண்டிக்கடை அருகில் 108 ஆம்புலன்ஸ் சேவை தெருமுனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 9:33 am IST

ஏற்காடு ஒண்டிக்கடை அருகில் 108 ஆம்புலன்ஸ் சேவை தெருமுனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தாமோதரன், சிவப்பிரகாசம்,  அர்ஜூன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரேசன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாநில அமைப்பாளர் பிரேம்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் ஏற்காடு 67 மலைக் கிராம மக்கள் தொகைக்கு ஏற்ப 108 வாகனங்களும், இருசக்கர 108 வாகனமும் ஏற்காட்டில் இயக்கவேண்டும்.  மஞ்சக்குட்டை துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும். ஏற்காடு மலைப் பிரதேசத்தில் பச்சிளங்குழந்தை சேவைக்கான ஆம்புலன்ஸ் இயக்கப்பட வேண்டும். 108 ஒப்பந்த நிறுவனம்  தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கைக் கைவிட வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.