எடப்பாடி அருகே மின்னல் தாக்கியதில் வீடு தீப்பற்றி எரிந்தது.
எடப்பாடி மற்றும் சுற்றுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட மேலப்பாறை,
கோயில்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சின்னண்ணன் (49) என்பவரின் கூரை வீட்டின் மீது மின்னல் தாக்கியது, இதில் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன, மேலும் அவருடை விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரங்களும் தீப்பிடித்து எரிந்தன. இதேபோல் எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சி, பனங்காடு பகுதியில் விவசாய நிலங்களில் உள்ள மரங்களின் மீது மின்னல் பாய்ந்ததில் மரங்கள் கருகின. தொடர்ந்து நள்ளிரவு வரை விட்டுவிட்டு மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பிற்குள்ளானது. இரவு நேரத்தில் பெய்த பலத்த மழையால்
எடப்பாடி பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்ல காத்திருந்த பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டண ஒழுங்குமுறை குழு அமைக்கும் விவகாரம்: தனியாா் பள்ளிகளின் மனு மீது தில்லி அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

ராமா் கோயில் நன்கொடை திருட்டு விவகாரத்தில் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை கோரி ஆம் ஆத்மி சாா்பில் கையொப்ப பிரசாரம்: அரவிந்த் கேஜரிவால்

‘ஜனநாயகன்’ படத்தில் ‘தவெக’, ‘புதிய இந்தியா’ வசனங்களை நீக்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உத்தரவு!






