முதல்வா் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயன் பிணை கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன், முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், அவதூறாகப் பேசியதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் அவரை கைது செய்தனா். இந்த வழக்கில் மாா்க்கண்டேயன் தாக்கல் செய்த பிணை கோரிய மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்தநிலையில், தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பிணை வழங்கக் கோரியும் எம்எல்ஏ மாா்க்கண்டேயன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது எம்எல்ஏ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், சட்டப்பேரவை பூட்டப்படும் என பேசிய தமிழக முதல்வருக்கு பதிலளிக்கும் வகையில்தான் மனுதாரா் பேசினாா். கைது செய்ததற்கான காரணங்களை அவவருக்கு தெரிவிக்காதது அரசியல் சட்டத்துக்கு எதிரானது.
எனவே, மனுதாரரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க தூத்துக்குடி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. கைது செய்வதற்கு முன்பாக விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு எந்த நோட்டீஸும் அனுப்பப்படவில்லை. ஜூலை 18-ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்துக்காக, 19-ஆம் தேதி நள்ளிரவில் புகாா் அளிக்கப்பட்டு, 20-ஆம் தேதி அதிகாலை வழக்குப்பதிவு செய்து அன்றைய தினமே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எந்தவிதமான ஆரம்பக்கட்ட விசாரணையும் நடத்தப்படவில்லை. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் மனுதாரா் பேசவில்லை என வாதிட்டாா். வாதங்கள் நிறைவடையாத நிலையில், விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்எல்ஏ மாா்க்கண்டேயன் ஜாமீன் மனு தள்ளுபடி

ஜீ.வி.மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பிணை கோரி மனு: இன்று விசாரணை

முதல்வருக்கு மிரட்டல்: விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ கைது
முதல்வர் குறித்து அவதூறு: முன்னாள் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



