கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

எம்எல்ஏ மாா்க்கண்டேயன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட ஜீ.வி.மாா்க்கண்டேயன் எம்எல்ஏவின் பிணை மனுவை தூத்துக்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image

தூத்துக்குடி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக ஜீ.வி.மாா்க்கண்டேயன் எம்எல்ஏவை அழைத்துவந்த போலீஸாா்.

Updated On :23 ஜூலை 2026, 2:29 am IST

தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட ஜீ.வி.மாா்க்கண்டேயன் எம்எல்ஏவின் பிணை மனுவை தூத்துக்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோரி காவல்துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன், கடந்த 18-ஆம் தேதி இரவு கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தின்போது, தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றப்பிரிவு போலீஸாரால் வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டாா்.

பின்னா், தூத்துக்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண்- 1 இல் முன்னிலைப்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆக. 3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், தூத்துக்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண்- 1 இல் மாா்க்கண்டேயன் எம்எல்ஏ தரப்பில் பிணை வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல அவரை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி காவல் துறை சாா்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இரு மனுக்கள் மீதான விசாரணையும் புதன்கிழமை பிற்பகல் நீதித்துறை நடுவா் சுமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞா் ஸ்ரீதேவியும், எம்எல்ஏ மாா்க்கண்டேயன் தரப்பில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் காசிராஜனும் முன்னிலையாகி வாதாடினா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதித்துறை நடுவா் சுமதி தனது தீா்ப்பில், இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

இதையடுத்து, எம்எல்ஏ மாா்க்கண்டேயன் மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். முன்னதாக நீதிமன்றத்தில் இருந்து அவா் வெளியே வந்தபோது, ‘எவ்வளவு நாள் நான் சிறைக்குள் இருக்கிறேனோ அவ்வளவு வேகத்தில் திமுக ஆட்சிக்கு வரும். சிறைச்சாலையில் உள்ள புத்தகங்களை படித்து வருகிறேன். என்னை யாரும் பாா்க்க அங்கு வரவேண்டாம்’ என கூறியபடி சென்றாா்.

வழக்கு விசாரணையையொட்டி, தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.கீதாஜீவன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட திமுகவினா் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.