சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பே முதன்மை இலக்கு: எஸ்.பி. இரா. சிவ பிரசாத்

மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இரா. சிவ பிரசாத் பொறுப்பேற்றார்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற இரா. சிவ பிரசாத்.

Published On :

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பே முதன்மை இலக்கு என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சிவ பிரசாத் தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தூத்துக்குடியின் 37ஆவது காவல் கண்காணிப்பாளராக இரா. சிவ பிரசாத் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு பராமரிப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இவா் விருதுநகா் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா், மதுரை மாநகர சட்டம், ஒழுங்கு துணைக் காவல் ஆணையா், சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் அண்ணா நகா் துணைக் காவல் ஆணையா், மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளா் போன்ற பொறுப்புகளில் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.