காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை பெற்றுத் தரக் கோரி ஆர்ப்பாட்டம்

சேலத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தைப் பெற்றுத் தர நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

சேலத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தைப் பெற்றுத் தர நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி நடந்தது.
 இதுதொடர்பாக அதன் உரிமையாளர் சிவகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
 இதனிடையே ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தால், புகாரை வாங்க மறுப்பதாகத் தெரிகிறது.
 இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ.மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமாருக்கு ஆதரவாகச் செயல்படும் காவல்துறையினரை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.