ஓமலூர் காவல் நிலையம் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் புகுந்த மர்ம நபர்கள் நகைப் பணத்தைத் திருடிச் சென்ற சம்பவம் குறித்து ஓமலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஓமலூர் காவல் நிலையத்தின் அருகில் காமராஜர் நகரில் மகளிர் காவல் நிலையம் பின்புறத்தில் உள்ள நடராஜன் என்பவர் தனது வீட்டை ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு பூட்டி விட்டு சேலம் சென்று விட்டார். நள்ளிரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்த அவர், வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், அவர் வீட்டிற்குள் சென்றபோது வீட்டிலிருந்த மர்ம நபர் அவரை தள்ளிவிட்டு சுவர் மீது ஏறி தப்பியுள்ளார். வீட்டு பீரோவில் இருந்த இரண்டு மோதிரங்கள் இரண்டும், ரூ. 5,000 பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதேபோன்று இரண்டாவது தெருவில் உள்ள சக்திவேல் என்பவரின் வீட்டிலும் பீரோவில் இருந்த ரூ. ஒரு லட்சத்து 15 ஆயிரம் பணம், வெள்ளிக் கொலுசுகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதே பகுதியில் உள்ள முருகன் என்பவரின் வீட்டிலும் மர்ம நபர்கள் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். ஓமலூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழர்களின் இதயங்களை வென்ற பாரதிராஜா ஒரு பார்வை..!

படித்து வாங்கிய பட்டமா? சாதி ஒழிப்பில் பாரதிராஜா படங்கள்!
சென்னையில் கள்ளநோட்டுகள் பறிமுதல் விவகாரம்! பாக். பயங்கரவாதிகளுடன் தொடர்பா?

அமெரிக்காவில் அதிக அளவில் முதலீடு செய்யும் இந்தியா: அமெரிக்க அரசு மூத்த அதிகாரி
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


