எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On :26 ஜூன் 2018, 9:43 am IST

தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 தாரமங்கலம், பல்வேறு பகுதிகளில் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் நிகழ்வு தொடர்ந்து வந்தது. வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
 தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவில் இரண்டு பெண்களிடமும் நகைகள் பறிக்கப்பட்டன. திருடர்களைப் பிடிக்க ஓமலூர் டி.எஸ்.பி பாஸ்கரன் தனிக்குழுவை அமைத்தார். போலீஸார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
 ஓமலூர் அருகே தாரமங்கலம் சாலையில் சோதனையில் ஈடுபட்ட போலீஸார் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது அவர்கள் தாரமங்கலம் எம்.ஜி.ஆர் காலனியைச் சேர்ந்த சேட்டு (32), ரமேஷ் (35)என்பது தெரியவந்தது. இருவரும் தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் குடமுழுக்கில் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும், ஓமலூர், தாரமங்கலம், நங்கவள்ளி ஆகிய பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை பணம் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.