மாணவர்கள் குறித்து 'சர்ச்சைக்குரிய' வகையில் பேசியதற்காக உத்தரகண்ட் பாஜக தலைவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். தான் பேசியதில் ஏதேனும் ஒரு வார்த்தை யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு தான் வருந்துவதாகவும், யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்று பட் கூறியுள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ள நிலையில், நீட் தேர்வுத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக போராட்டம் நடத்திய மாணவர்கள் குறித்து 'சர்ச்சைக்குரிய' கருத்துகளைத் தெரிவித்ததாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து உத்தரகண்ட் பாஜக தலைவர் மகேந்திர பட் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மகேந்திர பட் தனது சமூக வலைதள பக்க பதிவில், "சனிக்கிழமை நான் பேசிய வார்த்தைகளோ அல்லது கருத்துகளைத் தெரிவித்த விதமோ யாருடைய மனதையாவது அறியாமலேயே புண்படுத்தியிருந்தால், அதற்காக தான் வருத்தம் தெரிவிப்பதோடு மன்னிப்பும் கோருகிறேன்." யாரையும் புண்படுத்துவது தனது நோக்கம் அல்ல என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை தேர்வுகளில் முறைகேடுகளுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான வேலையில்லாத இளைஞர்களையும் மாணவர்களை 'சர்ச்சைக்குரிய' வகையில் ஒரு இழிவான வார்த்தையை பயன்படுத்தி பாஜக தலைவர் மகேந்திர பட் பேசியுள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் தீவிரமடைவதற்கு முன் பட் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறிய அம்மாநில காங்கிரஸ் தலைவர் கோடியால், மன்னிப்பு கோரத் தவறினால் காங்கிரஸ் மற்றும் பல்வேறு மாணவர்கள், இளைஞர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்தார்.
இதனிடையே, மகேந்திர பட் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து அவர் இந்த மன்னிப்பைக் கோரியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட வீடியோவில், எதிர்க்கட்சிகள் தனது கருத்துகளைத் தவறாக புரிந்துகொண்டு பேசுவதாக குற்றம் சாட்டிய பட், தன் மீது சுமத்தப்பட்ட வார்த்தைகளைத் தான் பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.
மாநில பாஜக ஊடகப் பொறுப்பாளர் மன்வீர் சிங் சவுகான், பட் தெரிவித்த கருத்துகளை எதிர்க்கட்சிகள் தவறாக புரிந்துகொண்டு அரசியல் லாபத்திற்காக திரித்து கூறுவதாக அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியால் கூறுகையில், பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்த விரக்தியையே மகேந்திர பட் பேச்சு வெளிப்படுத்தியதாகவும், முன்பு இதேபோன்ற 'சர்ச்சைக்குரிய' வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக முன்னாள் அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் பதவி விலக நேரிட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது, உத்தரகண்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிவு, பல்வேறு தேர்வு முறைகேடு புகார்களைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அரசை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
இருப்பினும், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கையைப் பின்பற்றுவதாகவும், முறைகேடுகளைத் தடுப்பதற்கான கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளதாகவும், இது தொடர்பான வழக்குகளில் பலரைச் சிறையில் அடைத்துள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
Summary
Uttarakhand BJP president Mahendra Bhatt has apologised following criticism from the Congress and other organisations over alleged objectionable remarks about students...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











