/

தும்பாட் இரண்டாம் பாகத்தில் இணைந்த ஆலியா பட்!

நடிகை ஆலியா பட் தும்பாட் இரண்டாம் பாகத்தில் இணைந்தது குறித்து...

News image

சோஹும் ஷா உடன் ஆலியா பட். - படம்: எக்ஸ் / சோஹும் ஷா.

Updated On :14 ஜூலை 2026, 3:06 pm IST

நடிகை ஆலியா பட் மிகவும் புகழ்பெற்ற தும்பாட் இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர்கள் ரஹி அனில் பார்வே மற்றும் ஆனந்த் காந்தி ஆகியோரின் இயக்கத்தில் உருவாகி கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் தும்பாட். ஹாரர் கதைக்களத்துடன் உருவான இப்படம் மறுவெளியீட்டிலும் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாவது பாகமான தும்பாட் - 2 படத்தை இயக்குநர் ஆதேஷ் பிரசாத் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தை சோஹும் ஷா பென் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளார்.

இந்தப் படம் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் இன்று கடந்த ஏப்ரலில் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், நடிகை ஆலியா படத்தில் இணைந்துள்ளதை படக்குழு உறுதுசெய்துள்ளது.

நடிகரும் தயாரிப்பாளருமான சோஹும் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் ஆலியா பட் உடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, “புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. வருக ஆலியா பட்” எனக் கூறியுள்ளார்.

கடைசியாக ஆலியா பட் நடிப்பில் ஆல்பா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரூ.90 கோடிக்கும் அதிகமான வசூலித்துள்ளது. மேலும், ஆலியா பட் லவ் அண்ட் வார் படத்தில் ரன்பீர் - விக்கி கௌஷல் உடன் இணைந்து நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பூமாதேவியின் மூத்த மகனான ஹஸ்தர் எனும் கடவுளை மையமாகக் கொண்டு தும்பாட் எனும் கிராமத்தில் நடைபெறும் இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Alia Bhatt joins Sohum Shah in 'Tumbbad 2'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.