மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் மாசி மகத் திருத்தேரோட்டம்

சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் மாசி மகத் திருத்தேரோட்டம் தொடங்கியது. 

News image
Updated On :1 மார்ச் 2018, 1:30 am

DIN

சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் மாசி மகத் திருத்தேரோட்டம் தொடங்கியது. 
கடந்த பிப். 21-ஆம் தேதி மாலை 3 மணிக்கு தேர் பொங்கல், சுவாமி புறப்பாடு, 23-இல் விநாயகர் பூஜை, ஆயக்கால் பூஜை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து திருக்கொடி ஏற்றம்,  புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு சின்னத் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. 
மேட்டூர் எம்எல்ஏ எஸ்.செம்மலை, கோயில் செயல் அலுவலர் கே.ராஜா ஆகியோர் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட  தேரில் அம்மன் எழுந்தருளினார். சின்னத் தேர் மற்றும் விநாயகர் தேர் முக்கிய வீதிகள் வழியாக நிலையை அடைந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். வியாழக்கிழமை பெரிய தேர் கிராம் சாவடி அருகில் நிலை சேர்த்தலும், வெள்ளிக்கிழமை பெரிய தேர் நிலை சேர்க்கப்படுகிறது. சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு சத்தாபரணம் நிகழ்ச்சியும், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மஞ்சள் நீராட்டமும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் கோயில் எழுத்தர் கலைவாணன், கட்டளைதாரர்கள் கமலநாதன், செந்தில்குமார், இளங்கோ, மேச்சேரி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர்கள் கே.கே.கலையரசன், ஆர்.சந்திரசேகரன், துணைத் தலைவர் மே.வெ.ராமகிருஷ்ணன், பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜே.குமார், ஜே.சுரேஷ், அழகாகவுண்டனூர் லோ.கதிரவன், இறையருள் நற்பணி மன்ற செயலர் ராமசாமி, பொருளாளர் ஆறுமுகம்,  ஆசிரியர் ரத்தினம், துணைத் தலைவர் ராஜா, ராகவேந்திரா மெட்ரிக்.பள்ளித் தாளாளர் அழகப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.