தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

காபி வாரியம் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம்

ஏற்காடு காக்கம்பாடி கிராம ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஏற்காடு காபி வாரியம் சார்பில் தூய்மை இந்திய விழிப்புணர்வு முகாம்  மற்றும் பேரணி  அண்மையில் நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 3:54 am

ஏற்காடு காக்கம்பாடி கிராம ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஏற்காடு காபி வாரியம் சார்பில் தூய்மை இந்திய விழிப்புணர்வு முகாம்  மற்றும் பேரணி  அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஏற்காடு காபி வாரிய முதுநிலை தொடர்பு அலுவலர்  ஸ்ரீதேவி தலைமை வகித்தார். காக்கம்பாடி ஊராட்சி பள்ளித் தலைமை ஆசிரியர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உடல் தூய்மை , சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எடுத்துக்கூறப்பட்டது. மேலும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  பள்ளிக் குழந்தைகள் விழிப்புணர்வு பதாகைகளை  ஏந்தி பேரணியாகச் சென்றனர். நிகழ்ச்சியில் காபி வாரிய ஊழியர்கள் தாகீர் உசைன்,  ஸ்ரீதர், திவ்ய பிரியா, ஜானகிராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.