ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தரமான கலப்பிட தீவனங்கள் உற்பத்தி செய்து வழங்க நடவடிக்கை

அமெரிக்கத் தொழில்நுட்பத்தில் தரமான கலப்பிட தீவனங்கள் உற்பத்தி செய்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆத்தூரில் திங்கள்கிழமை

Updated On :21 மே 2018, 9:05 pm

அமெரிக்கத் தொழில்நுட்பத்தில் தரமான கலப்பிட தீவனங்கள் உற்பத்தி செய்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆத்தூரில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டத்துக்குள்பட்ட கூடமலையில் ஜல்லிக்கட்டு விழா, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமையில் நடைபெற்றது.இதில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தார். பின்னர், ஆத்தூருக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வரின் உத்தரவின்படி கடந்த 10 நாள்களுக்கு முன் அமெரிக்கா சென்று அங்கு கால்நடைகளுக்குத் தேவையான கலப்பிட தீவனங்களை எப்படி உற்பத்தி செய்வது என்பது குறித்து ஆய்வு செய்து வந்துள்ளேன். அதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது எப்படி என்பது குறித்து சேலம் மாவட்டத்தில் உள்ள வி. கூட்ரோடு மற்றும் மேச்சேரியில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறைக்குச் சொந்தமான இடத்தை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தோம். தரமான கலப்பிட தீவனங்கள் உற்பத்தி செய்வதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டதும், அதற்கான நிதி ஒதுக்கப்படும்.
இதே இடங்களில் ஆடுகள் வளர்க்க அதிநவீன அரங்குகள் அமைக்கப்படும். இதற்கு அமெரிக்காவில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறையுடன் தமிழக அரசு சார்பில் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது. வருங்காலங்களில் ஆடு, கோழிகளை வளர்த்துப் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. சுமார் ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா ஆடுகள் எதிர்காலத்தில் வழங்கப்படும். கால்நடைக் கல்லூரிகள் நன்றாக செயல்பட்டு வரும் நிலையில், கூடுதல் கல்லூரி மற்றும் மாணவர்களின் சீட் எண்ணிக்கை உயர்த்தப்படாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறது எனத் தெரிவித்தார் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.