மேட்டூர் அணையின் உபரிநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மேட்டூர் அணை நிரம்பியதும் உபரிநீரை வெளியேற்ற அணையின் இடதுகரையில் உபரிநீர் போக்கி எனப்படும் 16 கண்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர் மேட்டூர் அனல் மின்நிலையம் அருகே சங்கிலி முனியப்பன் கோயில் பகுதியில் காவிரி டெல்டா பாசனக் கால்வாயில் கலக்கிறது. இந்த உபரிநீர் போக்கியின் இரு கரைகளிலும் தங்கமாபுரிபட்டினம், சேலம் கேம்ப் பகுதிகளில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டன. இதனால் மேட்டூர் அணை நிரம்பும் போதெல்லாம் அப்பகுதியில் உள்ள மக்களை மாவட்ட நிர்வாகம் வெளியேற்றி முகாம்களில் தங்கவைத்து நிவாரணம் வழங்கி வந்தது. தற்போது அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மேட்டூர் பொதுப்பணித் துறை சார்பில் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் ஒட்டுவதற்கு பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் சென்றபோது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளாக 97 வீடுகள் கண்டறியப்பட்டு 21 நாள்களில் அப்புறப்படுத்தும்படி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் கருப்பு எப்போது?
குதிரை பேரம் நடத்தியது யார் என்று நாடறியும்! தவெக அதைச் செய்யவில்லை! செங்கோட்டையன்

ஐபோன் 18 ப்ரோ சிறப்புகள் என்னென்ன? எத்தனை நிறங்களில் கிடைக்கும்?

ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ! பெற்றோர் கவலை
விடியோக்கள்

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam

வெளியானது ஹல்லல்லோ பாடல்!


