ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

ஆயுஷ் மருத்துவ முகாம்

எடப்பாடி டெக்ஸ் சிட்டி அரிமா சங்கம் சார்பில் ஆயுஷ் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. 

Updated On :8 அக்டோபர் 2018, 9:15 am IST

எடப்பாடி டெக்ஸ் சிட்டி அரிமா சங்கம் சார்பில் ஆயுஷ் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. 
எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமிற்கு, உதவி மருத்துவ அலுவலர் ராமு தலைமை வகித்தார். அரிமா சங்கச் செயலர் ஏ.மகாவிஷ்ணு வரவேற்றுப் பேசினார்.  சித்தா,  யுனானி உள்ளிட்ட பல்வேறு இந்திய மருத்துவ முறைகள் இணைந்த அரசு
ஆயுஷ் மருத்துவக் குழுவினர்  சிகிச்சை அளித்தனர். முகாமில் எடப்பாடி சுற்றுப்பகுதியைச் சார்ந்த 500-க்கும்மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர். மருத்துவர் கண்ணன் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். எடப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்  ஆர்.மோகன், அரிமா சங்கத் தலைவர் மனோகரன், ரிலையன்ஸ் நிர்வாக மேலாளர்
எம்.சதீஷ்குமார், முன்னாள் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் உள்ளிட்ட  ஏராளமானோர் பங்கு கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.