எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பழைய விலையில் உரம் விற்பனை

தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பழைய விலையிலேயே உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

Updated On :8 அக்டோபர் 2018, 9:15 am IST

தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பழைய விலையிலேயே உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுதொடர்பாக,  சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கோ.ராஜேந்திர பிரசாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
சமீப காலமாக உரம் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக உரங்களின் விலையை அனைத்து உர நிறுவனங்களும் உயர்த்தியுள்ளன. 
எனினும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் "டான்பெட்" மூலமாக தற்போது இருப்பில் உள்ள உரங்கள் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி யூரியா,  டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் பழைய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. 
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை வாங்கிப் பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.