சேலம் ஆயுதப்படை மைதானத்தில் பணியின்போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காவல்துறை, ராணுவம் மற்றும் அனைத்து பாதுகாப்புத் துறைகளிலும் பணியின் போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி வீர வணக்க நாள் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
நடப்பாண்டில் அனைத்து பாதுகாப்புத் துறைகளிலும் பணியின்போது வீர மரணம் அடைந்த 414 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சேலம் மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 126 குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மாநகரக் காவல் ஆணையர் கே.சங்கர், சேலம் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) கார்த்திகேயன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோ.ஜார்ஜ், துணை ஆணையர் தங்கதுரை மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர். மேலும், பணியின் போது உயிர் தியாகம் செய்தோரின் குடும்பத்தினர் நேரில் அழைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரையில் நாளை வைகையாற்றில் எழுந்தருளுகிறாா் அழகா்

இலங்கை- செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு: நீதிமன்ற உத்தரவில் மீண்டும் தொடக்கம்

மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்- மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு - வாக்குக் கணிப்பில் தகவல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

