சேலம் மாநகராட்சிப் பகுதியில் 1.4.2018 முதல் சொத்துவரி பொது சீராய்வு நடைமுறைக்கு வருகிறது என மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணையில் குடியிருப்புப் பகுதிகளுக்கு 50 சதவீதத்துக்கு மிகாமலும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதத்துக்கு மிகாமலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மாநகராட்சிக்குச் சொத்து வரி செலுத்துவோர் தங்களது சொத்து விவரங்களை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுய மதிப்பீடுப் படிவத்தில் தங்களது சொத்து விவரங்களை பூர்த்தி செய்து அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
சுய மதிப்பீட்டுப் படிவங்கள் மாநகராட்சி ஆணையர் அலுவலகம், சூரமங்கலம் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் சூரமங்கலம் மண்டல அலுவலகம், கோட்டம் எண் 27 அரிசிப்பாளையம் காமராஜர் திருமண மண்டப வளாகம், கோட்டம் எண் 23 சூரமங்கலம் உழவர் சந்தை அம்மா உணவக வளாகம், அஸ்தம்பட்டி மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம், கோட்டம் எண் 30 அப்புச்செட்டி தெரு, கோட்டம் எண் 14 தொங்கும் பூங்கா வளாகம்.
அம்மாப்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் அம்மாப்பேட்டை மண்டல அலுவலகம், கோட்டம் எண் 42 நாராயண நகர் எம்.ஜி.ஆர். மருத்துவமனை அருகில், கோட்டம் எண் 32 தேர் வீதி மாநகராட்சி பள்ளி வளாகம், கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம், கோட்டம் எண் 52 ஜாரி கொண்டலாம்பட்டி வார்டு அலுவலகம், கோட்டம் எண் 50 மணியனூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் உள்ளிட்ட இடங்களில் சுய மதிப்பீட்டு படிவங்களை பொதுமக்கள் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
குடியிருப்புப் பகுதிகளுக்கு தினந்தோறும் வருகை தரும் மாநகராட்சி களப்பணியாளர்களிடமும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.salemcorporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளத்தில் சென்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த படிவங்களை அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் ஆணையர் அலுவலகத்திலோ, சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களிலோ, வரி வசூல் மையங்களிலோ அல்லது தங்களது பகுதிகளுக்கு தினந்தோறும் வருகை தரும் மாநகராட்சி களப்பணியாளர்களிடமும் வழங்கலாம்.
மேலும், பூர்த்தி செய்த சுய மதிப்பீடு படிவத்தை அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க விரும்புவோர் ஆணையர், சேலம் மாநகராட்சி நாவலர் நெடுஞ்செழியன் சாலை, கோட்டை, சேலம் -636 001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவான அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் சுய மதிப்பீடு படிவங்களை பூர்த்தி செய்து வழங்காதவர்களின் சொத்துக்கள் மாநகராட்சி அலுவலர்களால் மறு மதிப்பீடு செய்யப்பட்டு, சொத்துவரி மாற்றியமைக்கப்படும். அரசாணையில் தெரிவித்துள்ளபடி மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் மறு மதிப்பீட்டு பணிகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆணையர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் ஐபோன் 18: விற்பனை எப்போது?

மணமகளே வா தொடரின் படப்பிடிப்பு நிறைவு! வைரலாகும் புகைப்படங்கள்!

அதிகாரம் யாருக்கு? தேர்தல் கருத்துக் கணிப்பு மீது இவ்வளவு எதிர்பார்ப்பு ஏன்?

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

