மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 180 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் குறித்து...

LIC HFL Recruitment 2026

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை - LIC HFL

Published On :

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 180 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விவரங்களை பார்ப்போம்.

பணி: இளநிலை உதவியாளர்(Junior Assistant)

காலியிடங்கள்: 180(தமிழ்நாடு-21) மாநிலங்கள் வாரியான காலியிடங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரிவது குறித்து தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: நகரம் வாரியான சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரம்-I மாதம் ரூ.20,000 - 41,509

நகரம்-II மாதம் ரூ.20,000 - 39,909

நகரம்-III மாதம் ரூ.20,000 - 38,709

வயது வரம்பு: 1.4.2026 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 2.4.1996-க்கு முன்போ, 1.4.2005-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. வயதுவரம்பில் அரசு விதிமுறை களின்படி 3 முதல் 5 வயதுவரை தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில், திருநெல்வேலி, தஞ்சாவூர்

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினரைத் தவிர, இதர அனைத்து பிரிவினர் ரூ.800 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.lichousing.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.4.2026

விண்ணப்பிப்போரின் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

The LIC Housing Finance Ltd has released its latest official recruitment notification to fill the 180 Junior Assistant Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.