திருச்சி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் (மிஷன் வாட்சல்யா) திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகிய பணிகளில் ஒரு ஆண்டு கால தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Protection Officer (Institutional Care)
காலியிடம்: 1
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ. 28,000
தகுதி: சமூகப்பணி, சமூகவியல், குழந்தைகள் மேம்பாடு, மனித உரிமை, பொது நிர்வாகம், உளவியல், மனநலம், சட்டம், பொது சுகாதாரம், சமுதாய வள மேம்பாடு ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணினி இயக்குவதில் திறன் பெற்றிருக்க வேண்டும். அவசர உதவி எண்களில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பணி: மேற்பார்வையாளர்
தகுதி: சமூகப்பணி, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், சமுதாய சமூகவியல், சமூக அறிவியல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி இயக்குவதில் தேர்ச்சி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.5.2026 தேதியின்படி 42 வயது பூர்த்தியடைந்தவர்களாக இருக்க வேண்டும். அவசர உதவி மைய சேவைகளில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tiruchirappalli.nic.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் 6.6.2026 தேதிக்கு முன் தபாலில் விண்ணப்பிக்கவும்.
மேற்கண்ட பணிகளுக்கு திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்க வளாகம், திருச்சிராப்பள்ளி - 620.001.
Summary
Regarding the positions of Project Coordinator and Supervisor at the Child Protection Centre (Mission Vatsalya) in Trichy District...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








