இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின்சார நிறுவனமான என்டிபிசி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 20 உதவி அலுவலர் (சுற்றுச்சூழல் மேலாண்மை) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 06A/26
பணி: Assistant Officer (Environment Management)
காலியிடங்கள்: 20
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஒபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
தகுதி: பொறியியல் துறையில் சுற்றுச்சூழல் மேலாண்மை பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பட்டப்படிப்புடன் சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவில் டிப்ளமோ, பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். நேர்முகத்தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஒபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்கள் ரூ.500 மட்டும் செலுத்தவும். இதர பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை என்டிபிசி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள எஸ்பிஐ வங்கியின் கட்டண ரசீதை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் செலுத்தவும் .
விண்ணப்பிக்கும் முறை: www.ntpc.co.in முறை இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.5.2026
Summary
Online application portal will remain open from 08.05.2026 to 22.05.2026. Please keep the required documents ready for upload at the time of application submission.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் நோட்டு அச்சகம்-நாணயம் உற்பத்திக் கழகத்தில் வேலை வேண்டுமா?

நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
விடியோக்கள்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |




