சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அன்னபூர்ணா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா

சேலம் பெரிய சீரகாபாடியிலுள்ள அன்னபூர்ணா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கல்லூரி முதல்வர் அ.அன்புச்செழியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

சேலம் பெரிய சீரகாபாடியிலுள்ள அன்னபூர்ணா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கல்லூரி முதல்வர் அ.அன்புச்செழியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
 இவ்விழாவில் ஆசிரியர் பணி குறித்து அவர் பேசுகையில் ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிப்பட்ட தெய்வீகமான பணியை மாணவர்களுக்கு அளிக்க தன்னலமற்ற தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டுமே போதாது கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். வாழ்க்கை என்ற பாடத்தை கற்றுத் தந்து ஒவ்வொரு மாணவர்களையும் சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். மேலும் சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதராக திகழும் ஆசிரியர்களை நன்றியோடு போற்றுவோம் என்றார்.
 விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் கல்லூரியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்வி குழுமத்தின் நிறுவனர் தலைவர் அன்னபூரணி சண்முகசுந்தரம், துணைத் தலைவர் என். வி. சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்து செய்தியினை வழங்கினர். விழாவில் துணை முதல்வர் சி.சரவணன், முதலாமாண்டு டீன் ஓ.சரவணன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். அனைத்து ஆசிரியர்களும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.