மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

குட்கா ஊழல்: நேர்மையான விசாரணை நடத்த வலியுறுத்தி செப்.18 -இல் திமுக ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

குட்கா ஊழலில் நேர்மையான விசாரணை நடத்த வலியுறுத்தி சேலத்தில் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி நடைபெறும்

Published On :

குட்கா ஊழலில் நேர்மையான விசாரணை நடத்த வலியுறுத்தி சேலத்தில் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இதுதொடர்பாக சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசில் நிலவும் ஊழல்களை கண்டித்தும், குட்கா ஊழலில் நேர்மையான விசாரணை மேற்கொண்டு துரித நடவடிக்கையில் சி.பி.ஐ. ஈடுபட வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சேலம் கிழக்கு, மத்திய மாவட்டம், மேற்கு மாவட்டம் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.இதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு செப்டம்பர் 17 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மாவட்ட எல்லையான தலைவாசலுக்கு வருகிறார்.  அங்கு அவருக்கு சேலம் கிழக்கு, சேலம் மத்திய, சேலம் மேற்கு மாவட்டங்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் இரவு சேலத்தில் தங்குகிறார். மறுநாள் (செப்.18) காலை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார் என தெரிவித்துள்ளார்.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சேலம் வருவதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பான மத்திய மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.