மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ஒரே நாளில் 135 ஜோடிகளுக்கு திருமணம்

வாழப்பாடி அருகே பிரசித்திபெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் புதன்கிழமை ஒரு நாள் முகூர்த்த

Published On :

வாழப்பாடி அருகே பிரசித்திபெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் புதன்கிழமை ஒரு நாள் முகூர்த்த தினத்தில் 135 திருமணங்கள் நடைபெற்றன. இதனால் மணமக்கள்,  உறவினர்களின் கூட்டத்தால் கோயில் நிரம்பி வழிந்தது. 
சேலம்,  நாமக்கல், விழுப்புரம், தருமபுரி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தோஷங்கள் நீங்குவதற்கும், பரிகாரங்கள் செய்வதற்கு எளிமையாக இருப்பதால்,  பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் திருமணங்கள் நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  சுப முகூர்த்த தினங்களில் தினசரி 50 முதல் 100  திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.
பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில், புதன்கிழமை ஒருநாள் முகூர்த்தத்தில் மட்டும் 135 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. மணமக்கள், உறவினர்களின் கூட்டத்தால் கோயில் நிரம்பி வழிந்தது. அதனால், பேளூரில் புதன்கிழமை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சமீபகாலமாக கோயிலில் திருமணம் செய்து கொண்டு, திருமண்டபங்களில் வரவேற்பு விழாவை நடத்துவது அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் அதிக திருமணங்கள் அரங்கேறும் கோயில்களில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் முதன்மையாக திகழ்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.