ஆட்டையாம்பட்டியில் நள்ளிரவில் மூதாட்டியின் வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த 9 பவுன் சங்கிலி மற்றும் மோதிரத்தை திருடிச்சென்றுள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்த எஸ்.பாலம், பெத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லம்மாள் (76). கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது கணவர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியில் இவரது மகன்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது பேத்தியின் கணவர் வெளியூர் சென்று விட்டதால், கடந்த 10 நாள்களாக அவருக்கு துணையாக அவரது வீட்டில் நல்லம்மாள்
தங்கியிருந்தார்.
பின்னர், 10-ஆம் தேதி காலை தனது வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாராம். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 7 பவுன் மற்றும் 2 மோதிரம் திருட்டு போயிருந்தனவாம்.
புகாரின் பேரில், ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலங்குளம் நல் மேய்ப்பா் ஆலயத்தில் 29-வது பிரதிஷ்டை பண்டிகை!
இன்றைய ராசி பலன் (18.05.2026) - கன்னி
இன்றைய ராசி பலன் (18.05.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (18.05.2026) - தனுசு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
