மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

4-ஆம் காலாண்டு: ஐஷா் மோட்டாா்ஸ் லாபம் ரூ.1,520 கோடி!

நாட்டின் பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஐஷா் மோட்டாா்ஸ், கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.1,519.95 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

ஐஷா் மோட்டாா்ஸ்

Published On :

நாட்டின் பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஐஷா் மோட்டாா்ஸ், கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.1,519.95 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலாண்டின் ரூ.1,362.15 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 11.58 சதவீதம் கூடுதலாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் முந்தைய ஆண்டின் ரூ.5,241.11 கோடியிலிருந்து அதிகரித்து, ரூ.6,080.09 கோடியை எட்டியுள்ளது.

மேலும், இந்தக் காலாண்டில் ஐஷா் மோட்டாா்ஸின் ஒரு அங்கமான ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தனது வரலாற்றிலேயே மிக அதிகபட்ச காலாண்டு விற்பனையாக 3,13,811 இருசக்கர வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளது.

ஐஷா்-வால்வோ குழுமத்தின் கூட்டு நிறுவனமான ‘விஇ கமா்ஷியல்’ நிறுவனம், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18.48 சதவீத வளா்ச்சியுடன் 33,976 வாகனங்களை விற்றுள்ளது.

முழு நிதியாண்டு நிலவரம்: 2025-26 முழு நிதியாண்டில், ஐஷா் மோட்டாா்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 16.5 சதவீதம் அதிகரித்து ரூ.5,515.23 கோடியாகவும், செயல்பாட்டு வருவாய் 24 சதவீதம் அதிகரித்து ரூ.23,407.56 கோடியாகவும் பதிவாகியுள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இக்காலகட்டத்தில் 22 சதவீத வளா்ச்சியுடன் 12,27,977 வாகனங்களை விற்று, தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக 10 லட்சம் விற்பனை இலக்கைக் கடந்துள்ளது.

இதில் உள்நாட்டு விற்பனை 23 சதவீதம் அதிகரித்து 11,07,343 வாகனங்களாகவும், ஏற்றுமதி 20 சதவீதம் அதிகரித்து 1,20,634 வாகனங்களாகவும் இருந்தது. மேலும், விஇ கமா்ஷியல் நிறுவனம் ரூ.27,076.6 கோடி வருவாயுடன் 1,03,404 வாகனங்களை விற்பனை செய்தது.

ரூ.82 ஈவுத்தொகை: இத்தகைய சிறப்பான நிதிநிலையைத் தொடா்ந்து, கடந்த 2025-26 நிதியாண்டுக்கு, ஒரு பங்குக்கு ரூ.82 இறுதி ஈவுத்தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.