புதுதில்லி: எஃகு உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல், அதன் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாயின் உந்துதலால், 2025-26 நிதியாண்டின் 4வது காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் இருமடங்குக்கும் மேலாக உயர்ந்து ரூ. 2,965 கோடியாக இருப்பதாக அறிவித்தது.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், நிறுவனம் ரூ. 1,201 கோடி நிகர லாபத்தைப் ஈட்டியது. 4வது காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ. 63,518.60 கோடியாக உயர்ந்தது. இதுவே கடந்த ஆண்டின் 4வது காலாண்டில் இது ரூ. 56,679.11 கோடியாக இருந்தது.
2026 நிதியாண்டில், நிறுவனம் ரூ. 10,885.82 கோடி நிகர லாபம் ஈட்டியது. இதுவே கடந்த (2024-25) நிதியாண்டில் ஈட்டிய ரூ. 3,173.78 கோடியிலிருந்து பார்க்கும் போது இது மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்தது.
நிறுவனத்தின் மொத்த வருமானம், 2025 நிதியாண்டில் ரூ. 2,20,083.04 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 2,33,541.72 கோடியாக உயர்ந்துள்ளது.
2024-25 நிதியாண்டின் 4வது காலாண்டு டாடா ஸ்டீல் உள்ளூர் (இந்தியா) செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருவாய் ரூ. 38,447.96 கோடியாக இருந்தது. 2024-25 நிதியாண்டின் 4வது காலாண்டில் இது ரூ. 34,398.84 கோடியாக இருந்தது.
நீலாச்சல் இஸ்பாட் மற்றும் பிற இந்தியச் செயல்பாடுகள் மூலம் நிறுவனம் இணைந்து ரூ. 6,604 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டியது. 2024-25 நிதியாண்டின் 4வது காலாண்டில் இது ரூ. 4,277 கோடியாக இருந்தது.
டாடா ஸ்டீல் - நெதர்லாந்து மூலம் நிறுவனம் ரூ. 17,016 கோடி வருவாய் ஈட்டியது. அதே வேளையில், இங்கிலாந்து செயல்பாடுகள் மூலம் நிறுவனம் ரூ. 5,774.44 கோடி வருவாய் ஈட்டியது.
மார்ச் 2026 நிலவரப்படி, நிறுவனத்தின் நிகரக் கடன் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ. 2,285 கோடி குறைந்து ரூ. 80,144 கோடியாக உள்ளது.
தலா ரூ. 1 முகமதிப்பு கொண்ட பங்குக்கு ரூ. 4 ஈவுத்தொகை வழங்குமாறு இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
Summary
Tata Steel on Friday posted more than two-fold rise in consolidated net profit to Rs 2,965 crore for the January-March quarter of 2025-26.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதி ஏர்டெல் 4வது காலாண்டு நிகர லாபம் 7,325 கோடியாக சரிவு!

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

என்எஸ்டிஎல் 4வது காலாண்டு நிகர லாபம் 8.4% உயர்வு!

மாருதி சுசுகியின் 4வது காலாண்டு லாபம் 7% சரிவு!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு


