தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பாரதி ஏர்டெல் 4வது காலாண்டு நிகர லாபம் 7,325 கோடியாக சரிவு!

தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 33.5 சதவீதம் சரிந்து ரூ. 7,325 கோடியாக இருப்பதாக இன்று தெரிவித்தது.

News image

ஏர்டெல்

Updated On :1 மணி நேரம் முன்பு

புதுதில்லி: தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 33.5 சதவீதம் சரிந்து ரூ. 7,325 கோடியாக இருப்பதாக இன்று தெரிவித்தது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் ரூ. 11,021.8 கோடியாக இருந்தது.

இந்தியாவின் 2வது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லின் செயல்பாடுகள் வாயிலாகக் கிடைத்த வருவாய், கடந்த ஆண்டில் ரூ. 47,876.2 கோடியாக இருந்த நிலையில், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில் இது 15.6 சதவீதம் உயர்ந்து ரூ. 55,383.2 கோடியாக உள்ளது.

காலாண்டு அடிப்படையில் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் லாபம் மற்றும் வருவாய் முறையே 10.4 சதவீதம் மற்றும் 2.5 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் பார்க்கும்போது, ​​ஏர்டெல்லின் செயல்பாடுகள் வாயிலாகக் கிடைத்த வருவாய் 7.7 சதவீதம் வளர்ந்து ரூ. 39,566 கோடியாக உயர்ந்துள்ளது.

அதிகரித்த வருவாய் திறன் மற்றும் விரிவடைந்து வரும் வாடிக்கையாளர் தளம் ஆகியவற்றால், நிறுவனத்தின் மொபைல் சேவை வருவாய் 8.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ஒரு நபருக்கான சராசரி வருவாய் ரூ. 245 ஆக இருந்த நிலையில், இந்தக் காலாண்டில் பாரதி ஏர்டெல்லின் ஒரு நபருக்கான சராசரி வருவாய் ரூ. 257 ஆக உள்ளது.

2026 நிதியாண்டு முழுவதற்கும், ஏர்டெல்லின் லாபம் 20.4 சதவீதம் சரிந்துள்ளது. இதுவே 2025 நிதியாண்டில் ரூ. 33,556 கோடியிலிருந்து ரூ. 26,695 கோடியாகக் குறைந்துள்ளது.

2026 நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 21.9 சதவீதம் உயர்ந்து ரூ. 2,10,972.8 கோடியாக உள்ளது.

Summary

Bharti Airtel on Wednesday reported a 33.5 per cent decline in consolidated net profit to Rs 7,325 crore for the January-March quarter of FY26.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.